சுடச்சுட

    

    நாகை மாவட்டத்தில் இரண்டு நாள்களில் 338 பேர் வேட்புமனு தாக்கல்

    By DIN  |   Published on : 28th September 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்குப் போட்டியிட 2 நாள்களில் 338 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
    நாகை மாவட்டத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 4,335 பதவியிடங்களுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.  இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப். 26-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
    வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு 150 பேரும் மனுத் தாக்கல் செய்தனர். மற்ற பதவிகளுக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
    இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு அளித்ததால், வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்படைந்திருந்தது.
    மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட, அதிமுகவில் மாற்று வேட்பாளர்கள் உள்பட 37 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட ஒருவரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 146 பேரும் செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்தனர்.
    கடந்த 2 நாள்களில் மட்டும் 338 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். நகராட்சி வார்டு உறுப்பினர்,
    பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மாவட்டத்தில் இதுவரை ஒருவர் கூட வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai