சுடச்சுட

  

  நாகை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

  By DIN  |   Published on : 28th September 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிட, அதிமுக வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
  21 உறுப்பினர்களைக் கொண்ட நாகை மாவட்ட ஊராட்சியின் உறுப்பினர்கள் பதவிக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சி வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சியின் 13-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளராகப் போட்டியிட ஜெயபாலா அசோகன், நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜூவானந்தத்திடம் வேட்புமனு அளித்தார். மாற்று வேட்பாளராக மா.தமிழ்ச்செல்வி மனுத்தாக்கல் செய்தார்.  
  மாவட்ட ஊராட்சியின் 15-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளராகப் போட்டியிட சி. திருநாவுக்கரசு, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பர்வீன் சுல்தானாவிடம் வேட்புமனு அளித்தார். மாற்று வேட்பாளராக, சின்னப்பிள்ளை மனு அளித்தார்.
  முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம், அதிமுக நகரச் செயலாளர் ஆர்.சந்திரமோகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கலையரசன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்க. கதிரவன், பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
  14-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளராகப் போட்டியிட தமயந்தி திருநாவுக்கரசு, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கிருபாகரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக மாலாரகுபதி மனு அளித்தார்.
  மயிலாடுதுறை: நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜி.என்.பாலமுருகன் (37) மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக மாப்படுகை ஊராட்சி செயலாளர் எம்.எஸ்.ஜி.சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
  தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், ஊரக வளர்ச்சித்துறை உதவிச் செயற்பொறியாளருமான எஸ்.இளங்கோவன் வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
  இதேபோல், 6-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளரான வரதம்பட்டு கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சரளா ரவிச்சந்திரன் (32) உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான ( நிலம்) எஸ்.ராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 7-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளரான கேசிங்கன் கிராமத்தைச் சேர்ந்த கே.பி.கணேசன் (65) வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக திருச்சிற்றம்பலம் வடக்கு வெளிப் பகுதியைச் சேர்ந்த செல்வம் (55)வேட்பு மனு தாக்கல் செய்தார்.
  வேதாரண்யம்:  வார்டு எண் 19-இல் போட்டியிட எஸ்.சிவானந்தம், 20-வது வார்டில் பிரேமலதா ராஜா, 21-ஆவது வார்டில் கி.வீரமணி ஆகியோர் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர். இதேபோல், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் 18-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு பரமேஸ்வரி முருகேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
  சீர்காழி: கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி 1-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் அகரஎலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுகந்திஜெயக்குமார் (41) தேர்தல் நடத்தும் அலுவலர் அப்பன்ராஜியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அகரஎலத்தூர் பா.ராணி (45) மனு தாக்கல் செய்தார். இதேபோல், மாவட்ட ஊராட்சி வார்டு எண் 2-இல் போட்டியிட அதிமுக வேட்பாளர் பழையார் மஞ்சுளாஉதயன் (46) தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணகோபாலிடம் வேட்புமனு  தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக தாண்டவன்குளம் நா.தேன்மொழி (51) வேட்புமனு தாக்கல் செய்தார்.  
  இதேபோல், மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3-இல் போட்டியிட அதிமுக வேட்பாளர் சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ. என்.சந்திரமோகன் (54) சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் டி.மோகன்ராஜீயிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக சட்டநாதபுரம் இளையராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். வார்டு எண் 4-க்கு அதிமுக வேட்பாளர் மங்கைமடம் கிராமத்தைச் சேர்ந்த பாலா (எ) வை.பாலசுப்பிரமணியன் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.முருகதாஸிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்றாக தென்னலக்குடி பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பூராசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜமாணிக்கம், பேரூர் செயலாளர் போகர்.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  குத்தாலம்...  11-ஆவது வார்டுக்கு டி.காமராஜூம், 12-ஆவது வார்டுக்கு பத்மினிசண்முகமும் அதிமுக சார்பில் போட்டியிட குத்தாலம் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர்களான புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ரவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் கில்பர்ட்ராஜ் ஆகியோரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காமராஜூக்கு மாற்று வேட்பாளராக பத்மநாபனும், பத்மினிசண்முகத்துக்கு மாற்று வேட்பாளராக உமாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் ஒன்றியக் குழுத் தலைவர் என்.தமிழரசன், அதிமுக ஒன்றியச் செயலாளர் சி.இராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  மேலும், மாவட்ட ஊராட்சியின் மற்ற வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்களும் தொடர்புடைய பகுதிகளின் ஊராட்சி ஒன்றிய தேர்தல் உதவி நடத்தும் அலுவலர்களிடம் செவ்வாய்க்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
  37 மனுக்கள்: அதன்படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள் உள்பட 37 பேர் செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai