சுடச்சுட

  

  இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி சார்பில் புரஸ்கார் விருது பெற்றவருக்கான பாராட்டு விழா, மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்றது.
  மயிலாடுதுறை வட்டம், திருவாளப்புத்தூரைச் சேர்ந்தவர் டி.ஏ.கலியமூர்த்தி. தவில் வித்வானான இவர், தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
  இந்நிலையில், இவரது கலைச் சேவையைப் பாராட்டி, இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி நிறுவனம் இவருக்கு புரஸ்கார் எனும் விருது வழங்கியுள்ளது. இதையொட்டி, டி.ஏ.கலியமூர்த்திக்கு பாராட்டு விழா, மயிலாடுதுறையில் நடைபெற்றது. சென்னை தொழிலதிபர் நல்லி.குப்புசாமி தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ரவிராஜபாண்டியன், சிட்டி யூனியன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், மயிலாடுதுறை தொழிலதிபர் என்.விஸ்வநாதன், திரைப்பட நடிகர் ஆர்.மாணிக்கவிநாயகம், இசை ஆராய்ச்சியாளர் பி.எம்.சுந்தரம், கலைமாமணி ஏ.கே.சி.நடராஜன் ஆகியோர் டி.ஏ.கலியமூர்த்தியைப் பாராட்டிப் பேசினர்.
  முன்னதாக, தமிழக அரசு கலைஞர் திருபாம்புரம் டி.கே.எஸ்.மீனாட்சிசுந்தரம், டி.கே.எஸ்.சேஷகோபாலன் ஆகியோரது மங்கள இசையுடன் தொடங்கிய இந்த விழாவை, முனைவர் கவிதா மோகன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
  விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட முன்னாள் தலைவர் ராம.சிதம்பரம் வரவேற்றார். எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி எஸ்.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
  விழா ஏற்பாடுகளை, காவல்துறை அதிகாரி (ஓய்வு)சுவாமிநாதன் தலைமையிலான தவில் மற்றும்  நாதஸ்வர கலைஞர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai