சுடச்சுட

  

  மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் பகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி செவ்வாய்கிழமை ஆய்வு செய்தார்.
  மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் உள்ள மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், மயிலாடுதுறை மகாதானத் தெருவில் உள்ள டிபிடிஆர் தேசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.
  இந்த மையத்தில் மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
  இந்த ஆய்வின்போது, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பி.சுபாநந்தினி, துணைக் காவல் கண்காணிப்பாளர் கலிதீர்த்தன், வட்டாட்சியர் எஸ்.காந்திமதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் எஸ்.மோகனரங்கன்(மணல்மேடு), ஏ.சதீஷ்குமார் (குத்தாலம்), சிவக்குமார் (தரங்கம்பாடி),  கே.பாரதிதாசன் (வைத்தீஸ்வரன்கோயில்) மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.காஞ்சிநாதன், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
  சீர்காழி... சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள், 21 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 309 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் பதிவாகும் வாக்குகள், சீர்காழி தென்பாதி குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் எண்ணப்படவுள்ளன. இதற்காக அங்கு அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கான அறைகளை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி ஆய்வு செய்தார். தொடர்ந்து, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 பஞ்சாயத்துக்கள், 23 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 345 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கான உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்படவுள்ள புத்தூர் சீனிவாசா தொழில்நுட்ப கல்லூரியை ஆட்சியர் பார்வையிட்டார். இந்த ஆய்வில் வட்டாட்சியர் மலர்விழி, சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொறியாளர் கனகராஜ், பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் ஆகியோர் உடனிருந்தனர்.
  குத்தாலம்... குத்தாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு, முன்னேற்பாடு பணிகள், முகவர் அமர வேண்டிய இடம், வாக்கு சீட்டுகளை எண்ணும் இடம் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி செவ்வாய்க் கிழமை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள ஒருசில அறைகளை உடனடியாக மாற்றி அமைக்க தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு  உத்தரவிட்டார். ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர்களான குத்தாலம் ஒன்றிய ஆணையர் ஜான்சன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், வட்டாட்சியர் இந்துமதி, வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai