சுடச்சுட

    

    அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ரயில், பேருந்துகளில் இலவச பாஸ் வழங்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 29th September 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ரயில், பேருந்துகளில் பயணம் செல்ல இலவச பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்டச் சிறப்பு மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் எம்.என்.கனி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி. கணேசன் வேலை அறிக்கையும், பொருளாளர் வி.அம்பிகாபதி நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் பங்கேற்று நிறைவுரையாற்றினார்.
    இதில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஜி.ஸ்டாலின், சிஐடியு மாவட்டச் செயலர் சீனி.மணி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சொ.கிருஷ்ணமூர்த்தி, தமுஎகச மாவட்டத் தலைவர் ந.காவியன், நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
    பின்னர், அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ரயில், பேருந்துகளில் பயணம் செல்ல இலவச பாஸ் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கென மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். நாகை அரசுத் தலைமை மருத்துவமனையில் எம்ஆர் ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். மாவட்ட, வட்ட அளவிலான மருத்துவமனைகளில் மனநல மருத்துவர்களை நியமிக்க வேண்டும். நாகையிலிருந்து மதுரை, நெல்லைக்கு நேரடி ரயில் விடவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    புதிய நிர்வாகிகள் தேர்வு: கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவராக எம்.என்.கனி, மாவட்டச் செயலராக டி. கணேசன், பொருளாளராக பி.ஏ.ஜி. சந்திரசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai