Enable Javscript for better performance
இந்திய தொலைத் தொடர்புத் துறை சார்பில் குவைத் நாட்டில் பணிபுரிய வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்திய தொலைத் தொடர்புத் துறை சார்பில் குவைத் நாட்டில் பணிபுரிய வாய்ப்பு

    By DIN  |   Published on : 29th September 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய தொலைத் தொடர்புத் துறையின் குவைத் திட்டப் பணிகளுக்கு, தொலைத் தொடர்புத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    இந்தியத் தொலைத் தொடர்புத் துறையின் குவைத் திட்டப் பணிகளுக்கு, இத்துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற, 30 வயதுக்குள்பட்ட பி.டெக் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பொறியாளர்கள், சிவில் பொறியாளர்கள், பட்டயப்படிப்பு தேர்ச்சிப் பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பட்டயப் படிப்பு தேர்ச்சியுடன், 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பைபர் ஸ்பைலைசர்கள், சிவில் ஆட்டோகாட் ஆப்ரேட்டர்கள், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மற்றும் குவைத் நாட்டில் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள், இந்திய ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் தொலைத் தொடர்புத் துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்களை w‌w‌w.‌o‌m​c‌m​a‌n‌p‌o‌w‌e‌r.c‌o‌m என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai