சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல் பணி: வேதாரண்யம்,  தலைஞாயிறு ஒன்றியங்களில் ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 29th September 2016 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேதாரண்யம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    தலைஞாயிறு, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகள், வாக்கு பதிவு மையங்களுக்குத் தேவையான பொருள்கள் போன்றவைகளைப் பார்வையிட்டார்.
    தலைஞாயிறு ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மணக்குடி வையாபுரியார் அரசு மேல்நிலைப் பள்ளி, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ள ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களையும் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
    இந்த ஆய்வின்போது, உதவித் திட்ட அலுவலர் கே.ராமலிங்கம், ஊராட்சி ஒன்றிய ஆணையர் என்.விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ)மு.இராஜமாணிக்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai