Enable Javscript for better performance
கரும்பு விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை வட்டம், தலைஞாயிறு என்பிகேஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கொள்முதல் செய்த கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை இரவு உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.
    தலைஞாயிறு கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், 2014 முதல் 2016- வரை கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்குரிய நிலுவைத் தொகை சுமார் ரூ.30 கோடி இதுநாள் வரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
    இந்நிலையில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் காசிநாதன் தலைமையில், கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆலை வளாகத்தில் நுழைந்து, சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு புறப்படத் தயாராகயிருந்த லாரியை நிறுத்தி, உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.
    இதையடுத்து, ஆலையின் நிர்வாக இயக்குநர்  மணிமேகலை, மயிலாடுதுறை  உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்  கலித்தீர்த்தன் மற்றும் கரும்பு ஆலை அதிகாரிகள், வருவாய் துறையினர் விவசாயிகளிடம் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் 2-ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai