சுடச்சுட

    

    கால்நடை வளர்ப்புத் திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 29th September 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் கால்நடை வளர்ப்புத் திட்டங்களில் பயன் பெறத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    மத்திய அரசின் முதலீட்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் கோழி வளர்ப்புத் திட்டம், பன்றி வளர்ப்புத் திட்டம், ஒருங்கிணைந்த அசைபோடும் சிறு பிராணிகள் மற்றும் முயல் அபிவிருத்தித் திட்டம், ஆண் எருமைக் கன்றுகளை அழிவிலிருந்து காப்பாற்றும் திட்டம் ஆகியவற்றின் கீழ், 2016-17-ஆம் ஆண்டுக்கு மாநில அளவில், பொதுப் பிரிவுக்கு ரூ.3.6 கோடியும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு ரூ.26 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    இந்தத் திட்டங்களில் பயன் பெற விரும்பும் கால்நடை வளர்ப்போர், நாகை கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை
    இயக்குநர், நாகை, மயிலாடுதுறை கோட்டங்களின் கால்நடை
    பராமரிப்புத் துறை உதவி இயக்குநர்கள், நாகை கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்பத்தை அளித்துப் பயன் பெறலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai