கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்ட விவசாயி நீரில் மூழ்கி சாவு
By DIN | Published on : 29th September 2016 09:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்ட விவசாயி, தவறி விழுந்து நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தார்.
புஷ்பவனம், தேவர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி மகன் செந்தில்கண்ணன் (38) விவசாயி. இவரது ஆட்டுக்குட்டி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த செந்தில்கண்ணன் வீட்டில் இருந்த ஏணியை பயன்படுத்தி கிணற்றுக்குள் இறங்கி, ஆட்டுக்குட்டியை மீட்டு, கரையில் சேர்த்தார். அப்போது, ஏணி திடீரென சரிந்ததால் நிலைதடுமாறிய செந்தில்கண்ணன், கிணற்றுக்குள் விழுந்தார்.
இதையறிந்த அப்பகுதியினர் விரைந்து சென்று, செந்தில்கண்ணனை மீட்க முயற்சி செய்தும், பலனின்றி அவர் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.