சுடச்சுட

  

  சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
  சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சி மன்ற தலைவர்கள், 21 ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 309 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வருகிற 17-ஆம் தேதி  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில்,  11 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும், 1 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும் (எண்16), 200 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
  இதேபோல், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சி தலைவர், 217 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுகவை சேர்ந்த வேட்டங்குடி ஊராட்சிக்கு தற்போது துணைத் தலைவராக உள்ள வில்வநாதனுக்கு இந்த முறை கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்பதால்,  அவர் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai