சுடச்சுட

  
  pradosham

  சீர்காழி சட்டைநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
  சீர்காழி சட்டைநாதர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. முன்னதாக நந்திபகவானுக்கு மஞ்சள், திரவியப்பொடி, இளநீர், தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

  பின்னர், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்மாள் பிரகார உலா நடைபெற்றது. இதேபோல் சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி கோயில்,திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai