சுடச்சுட

    

    திருக்குறள் பேரவை ஆண்டு விழா: சிறப்பாக சேவையாற்றுபவர்களுக்கு விருது

    By DIN  |   Published on : 29th September 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 4-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
    திருக்குறள் பேரவைத் தலைவர் முனைவர் சி.சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி தெ.மதிவாணன், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர்(ஓய்வு) முனைவர் ந.பஞ்சநாதம், பேராசிரியர் முனைவர் அ.அறிவொளி ஆகியோர் பங்கேற்றுப்  பேசினர்.
    விழாவில், மயிலாடுதுறை மருத்துவர் நாராயணன், ஆசிரியர் மருத.மாசிலாமணி, கருவூலத்துறை அலுவலர் பா.ராஜலெட்சுமி  ஆகியோர்களுக்கு அவர்களது சேவையைப் பாராட்டி, விருதுகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், நகர் மன்றத் தலைவர்  எஸ்.பவானி ஆகியோர் விருதுகளை வழங்கினர். தொடர்ந்து, திருக்குறள் பேரவைக்கான இணையதளத்தை வழக்குரைஞர் ந.கு.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர், கவிஞர் மு.மேத்தா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில், கவிஞர் வீதி.முத்துக்கனியன், பூவை.சாரதி, துரை.சந்தானலெட்சுமி, சி.ராஜகுமார், குத்தாலம் கு.ரா.சிவக்குமார் ஆகியோர் பேசினர். பேரவையின் துணைத் தலைவர் கா.வெ.மனோகரன் வரவேற்றார். சங்கப் பொருளாளர் சு.ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். தருமையாதீனம் கல்லூரி நூலகர் (ஓய்வு) இரா.செல்வநாயகம்,  நல்லாசிரியர் ரா.செல்வக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பேரவை செயலர் ந.கலியபெருமாள் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai