சுடச்சுட

  

  நாகை கடலோரப் பகுதியில் "கடல் கவசம்' பாதுகாப்பு ஒத்திகை

  By DIN  |   Published on : 29th September 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் "கடல் கவசம்' என்ற பெயரில் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
  கடந்த 2008-ஆம் ஆண்டு, மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கடல் வழிப் பாதுகாப்பை பலப்படுத்தவும், பரிசோதிக்கவும் ஆண்டுதோறும் இருமுறை ஆபரேஷன் ஆம்லா என்ற பெயரில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுவது வழக்கம்.
  இதேபோன்று பாதுகாப்பு ஒத்திகை கடல் கவசம் (சாகர் கவாச்) என்ற பெயரில் நாகப்பட்டினத்தில் புதன்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கடலோரப் பாதுகாப்பு குழுமம், கடற்கரை காவல் நிலையம், கடற்படையினர், சட்டம் ஒழுங்கு போலீஸார் ஆகியோர் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படை பிரிவினர், உளவுத் துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதுகாப்பு ஒத்திகை காரணமாக நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், கடற்கரை, நாகை கலங்கரை விளக்கம், மீன்பிடி துறைமுகம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூம்புகார், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, கோடியக்கரை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, தோப்புத்துறை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, தீவிர சோதனைகள் நடைபெற்றன.
  மேலும் கடலுக்குச் செல்லும் படகுகள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகுகள் உள்ளிட்டவை சோதனைக்குள்ளாக்கப்பட்டு, கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் நடைபெறுகிறதா என கண்காணிக்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai