சுடச்சுட

    

    நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,427 பேர் வேட்புமனு தாக்கல்

    By DIN  |   Published on : 29th September 2016 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்குப் போட்டியிட 1,427 பேர் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    நாகை மாவட்டத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 4,335 பதவியிடங்களுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.  இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப். 26-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
    வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு 150 பேரும் மனு தாக்கல் செய்தனர். மற்ற பதவிகளுக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
    இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட, அதிமுகவில் மாற்று வேட்பாளர்கள் உள்பட 37 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட ஒருவரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 146 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
    இதன் மூலம், செவ்வாய்க்கிழமை வரை நாகை மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 338-ஆக இருந்தது.
    இந்த நிலையில், புதன்கிழமை மட்டும் 1,427 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 8 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 77 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,336 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    இத்துடன், நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 1,765-ஆக உயர்ந்துள்ளது.
    நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு செவ்வாய்க்கிழமை வரை யாரும் வேட்புமனு அளிக்காத நிலையில், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் புதன்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை ஒருவர் கூட வேட்புமனு அளிக்கவில்லை.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai