சுடச்சுட

    

    மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகை

    By DIN  |   Published on : 29th September 2016 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் தரக்குறைவாகப் பேசியதாக நகராட்சி அலுவலகத்தை துப்புரவுப் பணியாளர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
    சேமிப்பு நிதியை வழங்கவேண்டும், துப்புரவு பணிக்கான உபகரணங்கள் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் சங்கத் தலைவர் ப.வீரன் தலைமையில் துப்புரவுத் பணியாளர்கள் 75-க்கும் மேற்பட்டோர்  நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அப்போது, ஆணையர் துப்புரவு பணியாளர்களை அவமரியாதையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
    இதைக் கண்டித்து துப்புரவு பணியாளர்கள், நகராட்சி அலுவலகம் வாயிலில் அமர்ந்து முற்றுகையிட்டனர். அவர்களிடம், மயிலாடுதுறை காவல் துறையினர், நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ரெ.இடும்பையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்னர் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai