Enable Javscript for better performance
மயிலாடுதுறை நகராட்சி வார்டுகளுக்கு 5 பேர் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை நகராட்சி வார்டுகளுக்கு 5 பேர் மனு தாக்கல்

    By DIN  |   Published on : 29th September 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட திமுக, மதிமுக, சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 5 பேர் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
    மயிலாடுதுறை நகராட்சி 2-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மதிமுக சார்பில் மார்க்கெட் எஸ்.கணேசன்(56), இவருக்கு மாற்று வேட்பாளராக ஜி.கோவிந்தராஜன் (32) மற்றும் 14-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் கே. ஜி.சம்பத் (44) 7-ஆவது வார்டில் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட கா.ஜெயந்தி (40), 35-ஆவது வார்டில் உஷாராணி (45) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இதேபோல், மயிலாடுதுறை ஒன்றியக் குழு 7-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாகப் போட்டியிட புத்தகரம் மு.சுமதி (36) வேட்பு மனு அளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai