சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 29th September 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான தொண்டு நிறுவனங்கள் அக். 15-ஆம் தேதிக்குள் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
    மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணைய அறிவுறுத்தல்படி,  பதிவுப் பெறவேண்டும். மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்காக செயல்படும் மனநல காப்பகங்கள், மனநலச் சட்டம் 2002-ன் கீழ் அங்கீகாரம் பெற வேண்டும்.
    மாவட்டத்தில் இதுவரை பதிவு, அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள், மனநலக் காப்பகங்கள் உடனடியாக உரிய பதிவு, அங்கீகாரம் பெற வேண்டும். பதிவுப் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலிருந்து பெற்று, ஆக். 15-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai