சுடச்சுட

    

    மாவட்ட எல்லையில் காவிரி நீருக்கு மலர் தூவி வரவேற்பு

    By DIN  |   Published on : 29th September 2016 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நாகை மாவட்ட எல்லைக்கு வந்தபோது மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
    மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர், புதன்கிழமை காலை நாகை மாவட்ட எல்லையான குத்தாலம் அருகே உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளில் தலைப்பு பகுதியில் உள்ள நீர்த்தேக்கிக்கு (கதவணை)வந்தடைந்தது. பொங்கி வந்த காவிரியை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், இளம் பொறியாளர் ராஜராஜன் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றார்கள்.
    புதன்கிழமை அதிகாலை முதல் நீர் தேக்கியிலிருந்து, காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பாசன விதிகளின்படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடைப் பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன்படி இன்னும் ஓரிரு நாள்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதையொட்டி, நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai