சுடச்சுட

    

    முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 29th September 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    பிளஸ் 2 பொதுத் தேர்வில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.வி.எஸ்.சி, எம்.சி.ஏ, எம்.பி.ஏ மற்றும் பி.எட் முதலாம் ஆண்டு படிப்பவர்கள், வேறு கல்வி உதவித் தொகை ஏதும் பெறாத நிலையில், பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
    இதற்கான விண்ணப்பப் படிவத்தை, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திலிருந்து பெற்று, நவ. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365- 253042 என்ற தொலைபேசி எண்ணில், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai