சுடச்சுட

  

  நாகை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழா, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
  கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மா.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.சிவபுண்ணியம், மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.பி.செல்வராஜ், ஜி. திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.லெட்சுமி பிரபா, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
  நல்லாசிரியர் விருது பெற்ற செள.திருநாவுக்கரசு, ச.மார்ட்டின், தம்பையா, ஜெ.மணிவாசகம், மு.சந்திரசேகரன் ஆகியோரும், முனைவர் பட்டம் பெற்ற ஆங்கிலத் துறை விரிவுரையாளர் என்.நல்லமலை, பல்கலைக்கழகத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தமிழ்த் துறை, பொருளாதாரத் துறை விரிவுரையாளர்களும் பாராட்டி, கெளரவிக்கப்பட்டனர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் பிரசன்னகுமார், ஹேமாதங்கம், ராஜேஸ்வரி ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தமிழ்த் துறைத் தலைவர் க.சேகர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளித்தார்.  திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai