Enable Javscript for better performance
அக். 2-இல் மதுபானக் கடைகள் மூடல்- Dinamani

சுடச்சுட

    

    காந்தி ஜயந்தி நாளான அக். 2-ஆம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    காந்தி ஜயந்தி நாளான அக். 2-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து வகையான மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
    இந்த அறிவுறுத்தலை மீறி மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் திறக்கப்பட்டது தெரியவந்தால், தொடர்புடையோர் மீது மதுபான விதிமுறைகள்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai