Enable Javscript for better performance
அருள்வாக்கு சொல்பவர் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யம் அருகே அருள்வாக்கு சொல்பவர் காணாமல்போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    தரங்கம்பாடி வட்டம், கிளியனூர் கடக்கம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராஜூ (39). இவரது மனைவி கஸ்தூரி (35).
    இவர்கள் அருள்வாக்கு சொல்லும் தொழில் செய்துவருகின்றனர். வேதாரண்யத்தை அடுத்த வண்டுவாஞ்சேரி பகுதியில் கடந்த ஓராண்டாக தங்கியிருந்து, அருள்வாக்கு சொல்லி வந்தனர்.
    இந்த நிலையில், செப்.6-ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற ராஜூ மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
    இதுகுறித்து வாய்மேடு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai