சுடச்சுட

    

    மயிலாடுதுறை அருகே கரும்பு விவசாயிகள் மேற்கொண்ட உள்ளிருப்பு போராட்டம், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வியாழக்கிழமை கைவிடப்பட்டது.
    மயிலாடுதுறை வட்டம், தலைஞாயிறு கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016 வரை, கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்குரிய நிலுவைத் தொகை ரூ.30 கோடி இன்னும் வழங்கப்படவில்லை.
    இந்நிலையில், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் காசிநாதன் தலைமையில், கரும்பு விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு  உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர். அவர்களிடம் கரும்பு ஆலை நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால், 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கரும்பு விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்தது.
    இந்நிலையில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் மணிமேகலை, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பி.சுபாநந்தினி, காவல் துணைக் கண்காணிப்பாளர் கலிதீர்த்தன் ஆகியோர் வியாழக்கிழமை நடத்திய 2-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையின்போது, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு நிலுவைத் தொகையைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, கரும்பு விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai