Enable Javscript for better performance
குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நாகூர் அருகே தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.
    நாகை அருகே நாகூர், மனோரா வடபுரம் பகுதியில் வசிப்பவர் முகமது இக்பால் மகன் அப்துல் பதாக் (22). இவர் மீது வெளிப்பாளையம், நாகூர் உள்ளிட்ட இடங்களில் கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், போலீஸாரின் அறிவுறுத்தலையும் மீறி அப்துல் பதாக் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளாராம்.
    இதையடுத்து, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை பரிந்துரையின் பேரில் அப்துல் பதாக்கை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து அப்துல்பதாக் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai