சுடச்சுட

  

  குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலானப் போட்டிக்கு தகுதி

  By DIN  |   Published on : 30th September 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சீர்காழியில் புதன்கிழமையுடன் நிறைவடைந்த குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலானப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
  சீர்காழி குறுவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கின.
  இந்த விளையாட்டுப் போட்டிகளின் நிறைவாக மேசைப்பந்து போட்டி சீர்காழி துரோணாலயா மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில் 17 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயில் பெண்கள் பள்ளி முதலிடம் பெற்றது. மாணவர்கள் பிரிவில் வைத்தீஸ்வரன் கோயில் குருஞானசம்பந்தர் பள்ளி முதலிடம் பிடித்தது. 19 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதலிடம் பெற்றது.
  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இம்மாணவ, மாணவிகளை குறுவட்ட விளையாட்டுப் போட்டி செயலர் எஸ்.முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜசேகர், செல்லத்துரை, இராம்.கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai