Enable Javscript for better performance
"சமூக அக்கறையுள்ள எழுத்து எக்காலத்திலும் நிலைக்கும்'v- Dinamani

சுடச்சுட

    

    "சமூக அக்கறையுள்ள எழுத்து எக்காலத்திலும் நிலைக்கும்'v

    By DIN  |   Published on : 30th September 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்ககாலம் தொட்டு சமூக அக்கறையோடு எழுதப்படும் படைப்புகள்தான் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் சிறப்பை பெற்றுள்ளது என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக அயல் நாட்டு தமிழ்க் கல்வித் துறை பேராசிரியர் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் கூறினார்.
    வேதாரண்யத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் நடைபெற்ற உ.வே.சா. இலக்கிய மன்ற விழாவில் பங்கேற்ற தெ.வெற்றிச் செல்வன், நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா? என்ற தலைப்பில் மறைந்த கவிஞர் முத்துகுமாரின் படைப்புகளைத் தழுவி மேலும் பேசியது:
    சமூக அக்கறை, தமிழ் மரபு செறிவுகளோடு முக்கிய படைப்புகளை அறிய செய்தவர் முத்துகுமார். அவரது கவிதைகள் மனித நேயத்தை மையமாக கொண்டவை. புதிய எழுத்துக்கள் மொழியின் பழமை வரலாறு, பண்பாட்டின் வரலாறு புரிதலோடும், அரசியல் தெளிவோடும் படைப்புகள் அமைவது காலத்தின் தேவை என்றார் அவர்.
    விழாவுக்கு கல்லூரி முதல்வர் அ.உத்திராபதி தலைமை வகித்தார். முனைவர் வி.மருதவாணன், உதவி பேராசிரியர் கு.அர்ச்சுனன், தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மா.மாதவன் உள்ளிட்டோர் பேசினர்.
    இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai