Enable Javscript for better performance
தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 30th September 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட, முன்னாள் படைவீரர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் விருப்பக் கடிதம் அளிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    நல்ல திடகாத்திரமான உடல் நிலை கொண்ட முன்னாள் படைவீரர்கள், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
    இப்பணியில் பங்கேற்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், கீழ்க்கண்ட தேதிகளில், தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரிடம் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை விருப்பக் கடிதம் அளிக்கலாம்.
    சீர்காழி - அக். 3, திருக்குவளை - அக். 5, கீழ்வேளூர் - அக். 7, தரங்கம்பாடி - அக். 13, வேதாரண்யம் - அக். 14.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai