Enable Javscript for better performance
நாகை மாவட்டத்தில் 1,159 பேர் வேட்புமனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்குப் போட்டியிட 1,159 பேர் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    நாகை மாவட்டத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 4,335 பதவியிடங்களுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.  இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப். 26-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
    வேட்புமனு தாக்கல் தொடங்கி 3-ஆவது நாளான புதன்கிழமை வரை 1,765 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 4-ஆவது நாளான வியாழக்கிழமை 1,159 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் விவரம்:
    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 17 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 98 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,008 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 31 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    இதன் மூலம், நாகை மாவட்டத்தில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களின் எண்ணிக்கை 2,924-ஆக உயர்ந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai