சுடச்சுட

    

    சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், நாகை அருகே உள்ள ஒரத்தூரில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
    தொடக்க விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஜெகதீசன் தலைமை வகித்தார். சிதம்பரனார் நடுநிலைப்பள்ளி தாளாளர் எம்.சம்பந்தம், சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒரத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    அக்.5 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் பள்ளி மாணவர்கள் பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
    தொடக்க நிகழ்ச்சியில் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் திட்ட அலுவலர் வி. உப்பிலிக்கண்ணன் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெ.புஷ்பராஜ் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai