சுடச்சுட

    

    மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் கிளையில் தீபாவளி விற்பனைத் தொடக்கம்

    By DIN  |   Published on : 30th September 2016 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் கிளையில், தீபாவளி விற்பனைத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் துணைப் பொதுமேலாளர் அ.ப.ரவி விழாவுக்கு தலைமை வகித்து பேசியது:
    மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் கிளைக்கு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.1.62 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய  ரகங்கள்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கான  ஆர்கானிக் சேலைகள், நெகமம், கோயம்புத்தூர்   காட்டன் சேலைகள், ஆண்களுக்கு 100 சதவீத பருத்தி சட்டைகள், லினன் காட்டன் சட்டைகளும் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டுள்ளன.
    மேலும், ரூ.2000-க்கு மேல் கைத்தறி துணிகள் வாங்கும் வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றார். நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.கஸ்தூரிபாய் குத்துவிளக்கேற்றி தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் நிறுவன கடலூர் மண்டல மேலாளர் அ.கோபாலன், மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கோ-ஆப்டெக்ஸ் கிளை மேலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். கிளை மேலாளர் (விற்பனை)பி.மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai