Enable Javscript for better performance
விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கீழ்வேளூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை இரவு இறந்தார்.
    கீழ்வேளூர் அருகே சிராங்குடி, நடுத்தெருவைச் சேர்ந்தவர் தொப்புளான் மனைவி ராணி (60). இவர் ஆழியூர் கடைத்தெருவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது, கீழ்வேளூர் பகுதியிலிருந்து வந்த இருசக்கர வாகனம் மோதி ராணி காயமடைந்தார். அவரை நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ராணி புதன்கிழமை இரவு இறந்தார்.
     இதுகுறித்து ராணியின் கணவர் தொப்புளான் அளித்த புகாரின் பேரில், கீழ்வேளூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai