சீர்காழி தென்பாதியில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக பெண்கள் முளைப்பாரி எடுத்து புதன்கிழமை வழிபாடு நடத்தினர்.
சீர்காழி தென்பாதி பசும்பொன் முத்துராமலிங்கனார் தெருவில் ஸ்ரீ வல்லடிகார சுவாமி, ஸ்ரீ ஏழைகாத்தம்மன், ஸ்ரீ மந்தகருப்பண்ணசாமி கோயில் உள்ளது. நாட்டில் அமைதி நிலவவும், மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழித்திடவும் இக்கோயிலில் முளைபாரித் திருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து மாலையில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றதும், நூற்றுக்கணக்கான பெண்கள் முளைபாரிகளை எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உப்பனாற்றில் சிறப்பு பூஜைகள் செய்து ஆற்றில் விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.