கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீர, தீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள், கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Published on
Updated on
1 min read

வீர, தீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள், கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீர தீர செயல்களில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2017-ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தாமாக முன்வந்து துணிச்சலுடன் பல நற்செயல்களை செய்த பெண்கள் இவ்விருதுக்குத் தகுதியானவர்கள்.
தகுதியானோர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களை இணைத்து உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெ. 116-ஏ, ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை- 94 என்ற முகவரிக்கு ஜூன் 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365-253059 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com