மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யம் உள்ளிட்ட
Published on
Updated on
1 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நாகை நகரச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் நாகை மாலி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
விவசாயத் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகி அமிர்தலிங்கம், விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர் முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் எம்.மணி தலைமையில் ஒன்றிணைந்த அக்கட்சியினர் மத்திய அரசு மற்றும் இந்து அமைப்புகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், வா. சிங்காரவேலு, கிளைச்செயலாளர் கங்காதரன், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே, சீதாராம் யெச்சூரி மீது நடந்த தாக்குதல் முயற்சியை கண்டித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.ஏ.செங்குட்டுவன் தலைமை வகித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com