முன்னாவல்கோட்டை பள்ளியில் மாணவர்களுக்குப் பாராட்டு

முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
12-ஆம் வகுப்பு மாணவர் நா.தர்மராஜ் 1051 மதிப்பெண் பெற்றார். 10-ஆம் வகுப்பு மாணவி ரா.கனிமொழி 486 மதிப்பெண் பெற்றார். 10-ஆம் வகுப்பு அறிவியலில் 6 மாணவர்களும், சமூக அறிவியலில் 2 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர். விழாவிற்கு தலைமை வகித்து மாணவர்களுக்கு ரொக்க பரிசை பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் கழகத்தலைவர் சா.வீரையன் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் கே.நேரு மற்றும் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் மாணவர்களைப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com