நீடித்த நிலையான மானாவாரி இயக்க பயிற்சி முகாம்

நீடித்த நிலையான மானாவாரி இயக்கதின் கீழ், விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் மன்னார்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நீடித்த நிலையான மானாவாரி இயக்கதின் கீழ், விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் மன்னார்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், கொரடாச்சேரி பகுதிகளைச் சேர்ந்த 200 விவசாயிகள் கலந்துகொண்டனர்.
பயிற்சி முகாமை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் பேசியது: மாவட்டத்தில் 4 ஆயிரம் ஹெக்டர் அளவில் 4 மானாவாரி தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு 4 தொடர்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முன்னோடி விவசாயிகள் அடங்கிய வேளாண் சார்பு துறை அலுவலர்களுடன் தொகுப்பு மேம்பாட்டு அணி வட்டார வேளாண்மை அலுவலரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது. 4 தொகுப்பிலும் 4 ஆயிரம் ஹெக்டரில் மேற்கொள்ளப்பட உள்ள பயிர் சாகுபடி கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.
முதலாண்டு திட்ட செயலாக்கத்திற்காக ரூ.25.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. உழவு மானியத்திற்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.500 வேளாண்மை பொறியல்துறை மூலம் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் விவசாயிகள் பயன்பாட்டிற்காக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதுபோன்ற பயிற்சி முகாமில் விவசாயிகள் கலந்துகொண்டால் சாகுபடியில் அதிக மகசூல் காணலாம் என்றார்.
முகாமில் மண்ணில் ஈரத்தை நிலைநிறுத்துதல், மழைநீர் சேமித்தல், வறட்சியை தாங்கக்கூடிய குறுகிய கால பயிர் சாகுபடி செய்தல், மண் வளம் பாதுகாத்தல், விவசாயிகளின் திறனை மேம்படுத்துதல், விளைபொருள்களைச் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பங்கேற்ற விவசாயிகளுக்கு பயிற்சி கையேடு, இடுபொருள்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தியாகராஜன், காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலர் காவிரி எஸ்.ரெங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com