நாகப்பட்டினத்தில் விளையாடச் சென்றவர் வீடு திரும்பாததால் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை, வெளிப்பாளையம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் பாலகுரு (19). பட்டயப் படிப்பு படித்துள்ள இவர், தினசரி காலையில் நாகை கடற்கரைக்குச் சென்று கால்பந்து விளையாடுவது வழக்கமாம். இந்நிலையில், இதேபோல் கடந்த வியாழக்கிழமை கடற்கரைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் பாலகுரு கிடைக்கவில்லை. துகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.