இயல்பு நிலைக்குத் திரும்பியது அரசுப் பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதன் காரணமாக, கடந்த 3 நாள்களாக முடங்கியிருந்த அரசுப் பேருந்துகளின் இயக்கம் புதன்கிழமை இயல்பு நிலைக்குத் திரும்பியது.
Published on
Updated on
1 min read

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதன் காரணமாக, கடந்த 3 நாள்களாக முடங்கியிருந்த அரசுப் பேருந்துகளின் இயக்கம் புதன்கிழமை இயல்பு நிலைக்குத் திரும்பியது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மே 14-ஆம் தேதி மாலை வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால், மே 14 முதல் மே 16-ஆம் தேதி வரை அரசுப் பேருந்துகளின் இயக்கம் பெருமளவு தடைபட்டிருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தமிழக அமைச்சர்கள், போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதன் காரணமாக, வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து ஊழியர்கள் புதன்கிழமை காலை பணிக்குத் திரும்பினர். இதனால், அரசுப் பேருந்துகளின் இயக்கம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அரசுப் பேருந்துகள் போதுமான எண்ணிக்கையில் இயக்கப்படதாததால், கடந்த 2 நாள்களாக தங்கள் பயணத் திட்டத்தை ஒத்திப்போட்டிருந்த பயணிகள் பலரும், புதன்கிழமை தங்கள் பயணத்தைத் தொடர முனைப்புக்காட்டியதால் பேருந்து நிலையங்களில் வழக்கமான பரபரப்பை விட கூடுதல் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com