சீர்காழி தென்பாதி காசிவிஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, பந்தல்கால் முகூர்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.
சீர்காழி தென்பாதியில் விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. பழைமை வாய்ந்த இக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. அதன்படி, கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, காசிவிஸ்வநாதர் சன்னிதி, கைவிடலப்பர் என்னும் ஐயப்பன் சன்னிதி, நவகிரக சன்னிதி, முருகன் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, மூலவர் விமானம் ஆகியவை திருப்பணிகள் நடந்து முடிந்தன. வருகிற ஜூன் 4-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, பந்தல்கால் முகூர்த்தம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன. பின்னர், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது. இதில் மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் ராதாகிருஷ்ணன், ரோட்டரி சாசனத் தலைவர் பாலவேலாயுதம், தமிழ்நாடு பிராமணர் சங்க சீர்காழி கிளை தலைவர் அருள். வைத்தியநாதன், செயலர் முத்துக்குமார், பொருளாளர் சசிகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.