விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியோர் மீது நடவடிக்கை கோரியும், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியும் சீர்காழியில் அக்கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நாகை வடக்கு மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலர் வேலுகுணவேந்தன், கிறிஸ்து பேரவை மாநில துணை அமைப்பாளர் தலித்தாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தாண்டவன்குளம், மாதானம், புதுப்பட்டினம், பட்டவிளாகம், காரைமேடு, நாங்கூர், இளையமதுகூடம் ஆகிய ஊர்களில் கட்சிக் கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி பகுதியில் குடிநீர் தட்டுபாட்டை நீக்க வேண்டும். விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில்
வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, சீர்காழி சட்டப் பேரவை தொகுதி செயலர் தாமு இனியவன், மாவட்ட துணைச் செயலர் காமராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், நகர செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.