நாகப்பட்டினத்தில், பாலிசி முதிர்வு தொகைகளை வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் செலுத்தியிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் இதில் பணியாற்றிய களப்பணியாளர்கள் ஆகியோர் இந்த நிறுவனத்தில் கட்டிய பணம் உரிய நேரத்தில் கிடைக்காததை கண்டித்தும், முதிர்வு தொகையை உடனடியாக வழங்கக் கோரியும் நாகை அவுரித்திடலில் யுனிவர்சல் வாடிக்கையாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு இதன் பொதுச் செயலர் பி.டி. இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைவர் தினகரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். பிஏசிஎல் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் லியாகத் அலி பங்கேற்று விளக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.