நாகையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் செப். 20-ஆம் தேதி நாகையில் நடைபெறவுள்ளன. இந்த விழாவின் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியில் பங்கேற்பவர்களுக்கு உணவு மற்றும் படிகள் வழங்கப்படும். உடல் தகுதியும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமும் கொண்ட முன்னாள் படைவீரர்கள், மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் செப். 17-ஆம் தேதிக்குள் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.