நாகப்பட்டினத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
நாகப்பட்டினத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா செப். 20 -இல் நடைபெறுகிறது. இதையொட்டி மாணவ, மாணவியர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாகை விளையாட்டரங்கில் கைபந்து, உயரம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இந்த போட்டிகளில் மாவட்டத்திலிருந்து விளையாட்டு அணிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இந்த போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு நூற்றாண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.