சீர்காழி அருகேயுள்ள எம்பாவை ஸ்ரீ ரேணுகாதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை நெப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பாலா, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ரவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.