சீர்காழி அருகே அன்னப்பன்பேட்டையில் தீ விபத்தில் வீடுகள் எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ பி.வி. பாரதி அரசின் நிவாரண உதவிகளை புதன்கிழமை வழங்கினார்.
தென்னாம்பட்டினம் ஊராட்சி அன்னப்பன்பேட்டையில் லட்சுமி என்பவரது குடிசை வீடு செவ்வாய்க்கிழமை மாலை தீப்பற்றி எரிந்து அருகில் உள்ள கிருஷ்ணம்மாள் வீட்டுக்கும் பரவியது. இரண்டு வீடுகளில் இருந்த பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5ஆயிரம் மற்றும் அரசின் நிதியுதவி,வேட்டி,சேலைகளை வழங்கினார். அப்போது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், அதிமுக ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திருமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.