வேதாரண்யத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
நாகை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து ஆண்களுக்கான போட்டியும், வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து பெண்களுக்கான மாரத்தான் போட்டியும் தொடங்கியது.
போட்டிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிகளில், சீர்காழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி , முதன்மை கல்வி அலுவலர் அ.கஸ்தூரிபாய், வருவாய் கோட்டாட்சியர் ம.கண்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டாட்சியர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் நா.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.