மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்ததைக் கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவர் சங்க நாகை மாவட்டச் செயலர் பி. மாரியப்பன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வா. சிங்காரவேலன், மாவட்டக் குழு உறுப்பினர் கபிலன், மாவட்ட துணைச் செயலர் அ. அமுல்ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மு. குமரேசன், கு. மகேசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டச் செயலர் அ. அறிவழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலர் சி. மேகநாதன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.