Enable Javscript for better performance
தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டம்

    By DIN  |   Published on : 22nd October 2017 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
    சீர்காழி ஒன்றியம் காத்திருப்பு ஊராட்சி மேலதெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தினர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி மூலம்  குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.
    இந்நிலையில், மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
     இதனால், அப்பகுதி மக்கள் சீர்காழி- நாகை தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாகசாலை போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து  மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
    இந்த போராட்டத்தால், சீர்காழி- நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai