Enable Javscript for better performance
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
    சீர்காழி ஈசானியத்தெருவில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் தீக்கிரையாகின. இதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் அதன் தலைவர் எல்.வி. மலர்கண்ணன் தலைமையில் நிதியுதவி, பாய், போர்வை, வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
    இந்நிகழ்ச்சியில் சங்கச் செயலர் சுப்பு.சொர்ணபாலு, முன்னாள் தலைவர் சரவணன், நிர்வாகிகள் மருது, கலா மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    இதேபோல், சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி துணை ஆளுநர் சுசீந்திரன் தலைமையில்,  8 குடும்பங்களுக்கும்  நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில்,  ரோட்டரி சங்கச் செயலர் விஜயக்குமார், பொருளாளர் ராஜேந்திரன், ரோட்டரி முன்னாள் தலைவர்கள் சுடர். கல்யாணசுந்தரம்,  சாமி.செழியன், முன்னாள் துணை ஆளுநர்கள் செல்வக்குமார், பிரசாந்த்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai